எம்.கே. சுந்தரம் அவர்கள்
நிர்வாகத் தலைவர்
எவர்கிரீன் எண்டர்பிரைஸஸ், ஈரோடு
ஹெல்ட்டா செக்கு நல்லெண்ணெய்
தயாரிப்பு நிறுவனம்
நமது முன்னோர்கள் மிகுந்த வலிமையுடன் திகழ்ந்ததற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று செக்கு நல்லெண்ணெய். அவர்கள் சுத்தமான நல்லெண்ணெயை உணவாக மட்டுமின்றி, மருந்தாகவும், தேகப் பூச்சாகவும், தலைக்கு குளிக்கவும் பயன்படுத்தினார்கள். முதிர்ந்த வயதிலும் திடகாத்திரமாகவும், அடர்த்தியான முடியுடனும் பளபளப்பான சருமத்துடனும் திகழ்ந்தார்கள். அவர்கள் பயன்படுத்திய நல்லெண்ணெய் செக்கில் ஆட்டி எடுக்கப்பட்ட நல்லெண்ணெய் ஆகும். எந்தவித ரசாயனமும் கலந்திராத நல்லெண்ணெய். இன்னும் சொல்லப்போனால், எண்ணெயில் இரசாயனத்தை கலக்கலாம் என்பதையே அவர்கள் அறிந்திருக்கவில்லை. உடற்பயிற்சிக்குப் பிறகு ஒரு கிண்ணம் செக்கு நல்லெண்ணெயை அப்படியே குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். மூட்டுத் தேய்மானத்தை தடுக்கும் அற்புதமான வழி அது. கால்நடையாகவே பல மைல் தூரம் பயணிக்கும் திறன் பெற்றிருந்தார்கள். தூய்மையான நல்லெண்ணெயை பயன்படுத்தி பல்வேறு பலன்களைப் பெற்று நலமுடன் வாழ்ந்தார்கள்.
இத்தனை சிறப்பு வாய்ந்த நல்லெண்ணெயை தயாரிக்கும் தொழிலை தேர்ந்தெடுத்து திறம்பட செயல்பட்டார் எனது தந்தையாரான திரு. குப்புசாமி ஐயா அவர்கள். பாரம்பரியமான விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர் பல்வேறு லாபம் தரும் விவசாயப் பொருட்களை விளைவிக்கவும், சந்தைப்படுத்தவும் வாய்ப்புகளைப் பெற்றிருந்தும் நல்லெண்ணெய் தயாரிக்கும் தொழிலை தேர்ந்தெடுக்கக் காரணம், மானுடத்தின் மகத்தான பொக்கிஷமான எள்ளும், அதன் எண்ணெயான நல்லெண்ணெயும் மக்களை சென்றடைய வேண்டும் என்பதும்தான். இரசாயனக் கலப்புள்ள பல்வேறு எண்ணெய்களை மக்கள் நாடத் தொடங்கிருந்த காலம் அது. நல்லெண்ணெய்யின் அரிய மருத்துவ குணங்களை முற்றும் உணர்ந்திருந்த அவர் வேறு ஒரு தொழிலை நாடவேயில்லை. மேலும், எள் அரைப்பதற்கு நவீனமான பெரும் இயந்திரங்களை தவிர்த்தார். பாரம்பரிய செக்குகளை நிறுவினார். இயற்கையான நல்லெண்ணெயை தயாரித்து நாணயத்துடன் வணிகம் செய்தார். தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற இடங்களில் இருந்து பலரது நம்பிக்கையினை பெற்றார்.
எனது தந்தையாரின் அடிச்சுவட்டை பின்பற்றி நானும் இத்தொழிலில் இன்னும் மேம்பட்ட இலக்குகளை குறி வைத்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். கடந்த 6 வருடங்களாக ஹெல்ட்டா என்ற பெயரில் தூய்மையான செக்கு நல்லெண்ணெயை தயாரித்து வழங்கி வருகிறேன்.
செக்கு நல்லெண்ணெய் ஏன் சிறந்தது?
முதலில் எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய்யின் சிறப்புகளை தெரிந்து கொள்வோம். மனித குலத்திற்கு இயற்கை அளித்த மாபெரும் கொடை எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய். நமது உடலுக்குத் தேவையான தாதுக்களும் வைட்டமின்களும் நிறைந்தது. உடலில் கொழுப்பு சேர விடாமல் தடுத்து, மாரடைப்பு அபாயத்திலிருந்து காக்கிறது. முதுமையைத் தள்ளிப்போட்டு, இளமையாக இருக்க உதவுகிறது. மேலும் நல்லெண்ணெயில் நிறைந்துள்ள புரோட்டீன் முட்டையில் நிறைந்துள்ள அளவுக்கு நிகரானது. அதனால் சைவ உணவாளர்களுக்கு மிகச் சிறந்த உணவுப் பொருளாகிறது.
நல்லெண்ணெயில் மக்னீசியம் அதிகளவில் உள்ளது. இது உடலில் இன்சுலினை சீராக வைத்து நீரிழிவு வருவதை தடுப்பதோடு உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது. நீரிழிவு உள்ளவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவர்கள் உணவில் நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் (துத்தநாகம்) என்னும் கனிமச்சத்து எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது. எலும்புகள் வலுவாக இருக்க கால்சியம் நிறைந்த உணவுகளோடு நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்வது நல்லது. பெண்கள் நல்லெண்ணெயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நிறைய பயன்களைத் தரும். மேலும் ஜிங்க் கனிமச்சத்து சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கச் செய்து சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் தன்மையுடையது. இதனால் சருமம் பொலிவோடு திகழும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இவ்வளவு பயன்களையும் செக்கில் அரைத்த நல்லெண்ணெயில் முழுமையாகப் பெற முடியும். பெரிய இயந்திரங்களில் அரைக்கப்படும்போது, எந்த பொருளும் அதீதமான சூட்டிற்கு உள்ளாவதை தவிர்க்க முடியாது. அதீத சூட்டில் உணவுப் பொருளின் தன்மை என்னவாகும் என்பது நாம் எல்லோரும் அறிந்ததுதானே!
செக்கில் அரைக்கப்படும்போது இதர பெரிய இயந்திரங்களைக் காட்டிலும் மிகக் குறைவான வெப்பத்தில் எண்ணெய் பிழிந்து எடுக்கப்படும். நீராவி பயன்படுத்துவதில்லை. அதனால் எள்ளின் அற்புதமான குணங்கள் அப்படியே முழுமையாகக் கிடைக்கப் பெறும். இயற்கையின் நிறத்தோடு, அடர்த்தியாகவும் காணப்படும். கொழ கொழப்புடன் இருக்கும். அதுதானே அதன் தன்மையும் சிறப்பும்? செல்களின் ஆரோக்கியத்திற்கும், மூட்டுக்கள் சீராக இயங்குவதற்கும் எண்ணெயில் உள்ள கொழகொழப்புதானே முக்கியம்? அற்புதமான படைப்பல்லவா அது?
ஆக, இரசாயனக் கலப்பில்லாமல், அதீதமான சூட்டிற்கு உள்ளாகாமல் எள்ளில் இருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுமானால் அதுவே நல்ல எண்ணெயாகும். அது செக்கில் அரைக்கப்படும்போது சாத்தியமாகிறது. ஆரோக்கியத்திற்க்கான விழிப்புணர்வு தற்போது அதிகரித்திருக்கிறது. அதனால் செக்கு நல்லெண்ணெயை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.
செக்கில் அரைக்கப்படுவதாலேயே நல்ல எண்ணெயாகி விடுமா?
செக்கில் ஆட்டப்படுவதால் மட்டுமே நல்ல எண்ணெய் கிடைக்குமா என்றால், வாய்ப்பு இல்லை என்றே சொல்லலாம். சிவப்பு எள், கறுப்பு எள், வெள்ளை எள் என்று பல ரகங்கள் உண்டு. இது விவசாய விளை பொருள். எல்லா நேரத்திலும் ஒரே மாதிரி எள் கிடைக்காது. மண்ணுக்கு மண் வேறுபடும். எள் கொள்முதல் என்பது அடிப்படை. தரம் பிரித்தல் அடுத்த நிலை. சரியான எள்ளை தேர்ந்தெடுத்து சுத்தம் செய்து அரைக்கப்படுதல் வேண்டும். மிக உறுதியான தரக் கட்டுப்பாட்டுக் கொள்கையையுடைய நிறுவனங்களால் மட்டுமே இது சாத்தியமாகும்.
வருடம் முழுக்க நல்ல எள்ளை மாநிலம் மாநிலமாக தேடித் தருவித்து நல்ல எண்ணெயாக்கும் வித்தை அது. தரமான எள்ளைப் பயிரிட்டுப் பராமரிக்கும் விவசாயிக்கும் எண்ணெய் தயாரிப்பாளருக்கும் இடையே உள்ள நம்பிக்கைக்கும் நாணயத்திற்கும் உள்ள சவால் அது.
எண்ணெய் தயாரிப்பு என்பது சற்றும் பிசகாமல் மணக்க மணக்க தரும் கலை. இது ஒரு கிராமத்து பொக்கிஷம். அதனாலேயே ஹெல்ட்டா செக்கு நல்லெண்ணெயை ஒருமுறை உபயோகித்தவர்கள் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்குகிறார்கள்.
ஹெல்ட்டா செக்கு நல்லெண்ணெய் இரசாயனக் கலப்பற்றதா?
ஹெல்ட்டா செக்கு நல்லெண்ணெய் பாரம்பரிய முறையில் செக்கில் பிழிந்து தயாரிக்கப்படுகிறது. இயற்கையான, சுகாதாரமான முறையில் சுத்தம் செய்யப்படுகிறது. பிசுபிசுப்பு நீக்குவதற்காகவோ, பள பள நிறத்திற்காகவோ, கெடாமல் இருப்பதற்காகவோ எந்தவித வேதிப் பொருளும் சேர்க்கப்படுவதில்லை.
மேலும், எங்கள் நிறுவனத்தில் எள்ளை பெரிய அளவில் கிடங்குகளில் சேமித்து வைப்பதில்லை. காரணம், நீண்ட நாள் சேமித்து வைக்கப்படும்போது, எள் கெட்டுப் போகாமல் இருக்க மருந்து தெளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதே நோக்கம்.
ஹெல்ட்டா செக்கு நல்லெண்ணெய் உங்கள் ஆரோக்கியத்திற்கான நல்லெண்ணெய். அதனை உங்களிடம் தருவதற்கு மிகுந்த கவனம் எடுத்துக் கொள்கிறோம்.
ஹெல்ட்டா செக்கு நல்லெண்ணெயும் பிளாஸ்டிக் பையில்தானே வருகிறது?
உண்மைதான். ஹெல்ட்டா செக்கு நல்லெண்ணெயும் பிளாஸ்டிக் பையில்தானே பேக் செய்யப்படுகிறது. ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் என்பது மனிதனின் நல்ல கண்டுபிடிப்புதான். அது தீண்டத் தகாததல்ல.
இங்கேயும் தரக் கொள்கைதான். உணவுப் பொருள்களை அதன் தன்மை மாறாமல் வைத்திருக்கும், மறுசுழற்சிக்கு ஏதுவான, தரமான ஃபுட் கிரேடு பாக்கெட்டில்தான் ஹெல்ட்டா செக்கு நல்லெண்ணெய் பேக் செய்யப்படுகிறது. மேலும், முடிந்த வரையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வழி வகைகளையும் எவர்கிரீன் நிறுவனம் கண்டறிந்து வருகிறது.